மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா…

5 August 2020, 7:42 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பிரப்சாலையில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் நபருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், ஓட்டுனர் மற்றும் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் பணியாற்றிய மாநகராட்சி புதிய கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் மனுக்கள் அளிக்க தனியாக மனுபெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக வெளிநபர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0