நீலகிரியில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை மையம் தயார்: மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

23 June 2021, 5:59 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 180 படுக்கைகள் கொண்ட இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை மையம் தயார்படுத்தபட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் பெரும்பாலான பழங்குடியின மக்களுக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது தற்போது இன்று நிலவரப்படி 139 நபர்களுக்கு தொற்று உள்ள நிலையில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணியினையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,” ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகள் உள்ள நிலையில், புதிதாக உதகையிலுள்ள காவலர்கள், சிறுவர் மன்றம் மண்டபம் 180 படுக்கைகள் கொண்ட வசதியுடன் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் 18 ஆயிரம் பழங்குடி இன மக்கள் இருந்து வரும் நிலையில், 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளோருக்கும் தடுப்பூசிகள் விரைவில் செலுத்தப்படவுள்ளது என்றார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அதே சமயம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Views: - 49

0

0