தஞ்சையில் 320 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்: கொரோனா சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தகவல்

8 May 2021, 5:47 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் 320 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மூன்று அல்லது நான்கு நாள்களில் தயாராகி விடும் என கொரோனா சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பையன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 ஆயிரத்து 44 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வல்லம் கும்பகோணம் பட்டுக்கோட்டை யில் கொரோணா சிறப்பு தடுப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 40 இடங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கொரோனா பெறுந்தொற்று சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பையன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உடன் சென்று புதிய கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைப்பது, ஆக்சிசன் தேவைகள் குறித்து கொரோனா சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பையன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பையர் பேசியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 1250 ஆக்சிசன் படுக்கைகள் உள்ளது. இதில் 52 சதவீதம் வரை தற்போது நோயாளிகள் உள்ளனர். இந்நிலையில் தோற்று அதிகரித்து வருவதால் படுக்கைகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையிலும் 320 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆபரேஷன் தேவை பைப்லைன் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று அல்லது நான்கு நாட்களில் 320 படுக்கைகள் தயாராகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 41

0

0