மணக்குளவிநாயகர் கோவிலில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

By: Udayaraman
31 July 2021, 2:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குளவிநாயகர் கோவிலில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பக்தர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான பணியினை சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தடுப்பூசி விழாக்களையும் நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு சமூக அமைப்புகள், தனியார் நிறவுனங்கள் மூலமாகவும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வறுகின்றன. இதனிடையே புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள் விநாயகர் கோவில் சார்பில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமினை பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் துவக்கி வைத்தார். முகாமில் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவிலுக்கு வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Views: - 433

0

0