10 ஆயிரத்தை கடந்து பயணிக்கும் புதுச்சேரி… மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

22 August 2020, 6:51 pm
coronavirus_tests_Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,112 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மேலோங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பாதிப்புகள் கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 520 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதில் புதுச்சேரியில் 440 நபர்களுக்கும், காரைக்காலில் 58 நபர்களுக்கும், ஏனாமில் 21 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3654 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 6307 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்,
புதுச்சேரியில் 6 நபர்களும், காரைக்காலில் 1 நபரும், ஏனாமில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.