வியாபாரிகள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிடில் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Author: Udhayakumar Raman
3 September 2021, 2:31 pm
Quick Share

மதுரை: மதுரை மாநகரில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் ஆணையர் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதுரை மாநகரில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்,100 நபர்களுக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் நிறுவனங்கள், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என்றும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Views: - 95

0

0