குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகன்: 30 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சடலம்…

8 September 2020, 4:49 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகனின் சடலத்தை 30 மணி நேரமாக போராடி மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா தெருதெருவாக சென்று பட்டாணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ் செல்வன் இவருக்கு ஒரு கால் இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இவரது பாட்டி இறந்து விடவே நேற்று ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசி தோப்பு பகுதியில் கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழை நீரில் குளிப்பதற்காக மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலினை கரையில் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் சிக்கி தமிழ்செல்வன் சத்தமிடவே அவரது தந்தை அவசர அவசரமாக உதவிக்கு சென்று உதவும் முயலும் முன் மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார்.

பதறிப்போன அவரது தந்தை ராஜா உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சடலம் கிடைக்காத நிலையில் இரவு நேரம் நெருங்கி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு மீண்டும் இன்று வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், நாற்றம்பல்லி, வேலூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சுமார் 50 பேர் இன்று காலை முதல் சடலத்தை தேடும் பணியை தீவிரப்படுத்தி தேடி வந்தனர். மழைநீர் தேங்கிய கல்குவாரியில் 20 அடி ஆழம் வரை தண்ணீர் இருப்பதாலும்,

சடலம் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு (NDRF ) 4வது பட்டாலியன் மகாவீர்சிங் தலைமையில் 14 பேர் கொண்ட குழு வரவழைக்கப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்பு துறை மற்றும் நீச்சல் பயிற்சி வீரர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினர் உதவியுடன் 30 மணி நேரத்துக்கு பின் போராடி சடலமாக மீட்டனர் . பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0