தோல் தொழிற்சாலை தொழிலாளி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு

Author: Udayaraman
13 October 2020, 4:52 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கிருஷ்ணவேணி அவருடைய சகோதரர் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி விட்டு சென்றதாகவும்,

நேற்று முனிசாமி மனைவியிடம் குழு லோன் சம்பந்தமாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது மனைவி திட்டியதால் மனமுடைந்து வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தொழிற்சாலை பின்புறம் உள்ள பாலாற்றில் கரையோரம் பாழடைந்த ஒரு அறையில் முனுசாமி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்தவாணியம்பாடி நகர போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு சம்பவம் குறித்து கொலையா? தற்கொலையா?தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 42

0

0