விவசாய கிணற்றில் விழுந்த பசு: இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு

11 September 2020, 6:13 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த 8 மாத கர்ப்பமான பசுவை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூரில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தனது 8 மாத கர்ப்பிணி பசுவை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு தோட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவானது கால் தவறி கிணற்றில் விழுந்தது. சத்தம் கேட்டு பசு கிணற்றில் விழுந்து இருப்பதை அறிந்த ஜெயராமன் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுவை விவசாயிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கிணற்றில் 2 அடி ஆழம் மட்டுமே நீர் இருந்ததால் பசு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது.

Views: - 0

0

0