வீட்டில் தனியாக இருந்த கந்துவட்டிக்காரர் கழுத்து அறுத்து கொலை

7 November 2020, 11:12 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோயில் அருகே வீட்டில்  தனியாக இருந்த வட்டி தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் 58. இவர் பல வீடுகளுக்கு சென்று  படுக்கையில் உள்ள நோயாளிகளை பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதுவரை திருமணம் செய்து கொள்ளாத இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் வரை இவர் வீட்டில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் அவர் கட்டிலின் மீது பிணமாக காணப்பட்டார். அவரது முகத்தில் ரத்தம் தோய்ந்த தலையணை காணப்பட்டதோடு கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் தலையணையால் முகத்தில் அழுத்தப்பட்டு சத்தம் வெளியே வராத வகையில் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று  பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் ஏஞ்சல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து  கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 24

0

0