“பெண்களே உங்களை உருவாக்கிக் கொள்ளவே வலைதளம், உருக்குலைக்க அல்ல” சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Author: kavin kumar
7 August 2021, 8:44 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் முறை மற்றும் அதில் உள்ள ஆபத்துகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக வளதளங்களை பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக அவ்வப்போது விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு, இத்தகை சமூக வளைதலங்களால் பாதிப்புக்குள்ளானால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் 180 -க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு “சமூக வலைதளங்கள் பெண்களை உருவாக்க மட்டுமே உருக்குலைக்க அல்ல” என்ற தலைப்பில் பல்வேறு விதமான சமூக வலைத்தள பயன்பாட்டு முறைகள் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. கோவை மாவட்டக் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயதேவி நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இணைய வாயிலாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 512

0

0