75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் மாரத்தான் போட்டி: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Author: kavin kumar
13 August 2021, 3:33 pm
Quick Share

தூத்துக்குடி: 75வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற 7.5 கிலோ மீட்டர் சைக்கிள் மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினம் வரகிற 15ம் தேதி கொண்டாடப்படப்பட இருப்பதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கடலோர காவல்படை சார்பில் சைக்கிள் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையிலிரந்து புதிய துறைமுக கடற்கரை வரை 7.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இப்போட்டியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீ, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மற்றும் கடலோர காவல்படை டிஐஜி, பயிற்சி ஆட்சியர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு 7.5 கிலோ மீட்டர்  சைக்கிளை ஓட்டினர். இறுதியாக புதிய துறைமுக கடற்கரையில் சைக்கிள் மாரத்தான் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ கூறுகையில், தூத்துக்குடி பக்கிள் ஓடை புனரமைக்கும் பணி 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், அதன் இரண்டு பக்கமும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் அதில் சைக்கிள் பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக அதற்கான தனி டிராக் அமைக்கப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இதன் மூலம்12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள எதுவாக இருக்கும் என குறிப்பிட்டார்.

தற்போது ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதி உதவியில் இருந்து மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 3வது கட்டமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போது நான்காம் கட்ட பணியாக மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மழைநீர் வடிகால் வசதி அமைப்பதற்கான 78 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு அதன்மூலம் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் வசதி விரிவு படுத்தப்படும் என்றார். கடந்த மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட 26 பகுதிகளில் தற்போது மின்மோட்டார் மூலம் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். உலக வங்கி நிதி உதவி கிடைக்கப் பெற்றவுடன் அங்கும் தற்காலிக வடி நீர் வடிகால் வசதி அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.

Views: - 138

0

0