சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை குறித்த சைக்கிள் பேரணி

31 January 2021, 1:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை குறித்த சைக்கிள் பேரணி நடைபெற்றது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எரிபொருள் சிக்கனம் பற்றியும், செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் பகுதியில் இப்பேரணியை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் இருந்து புறப்பட்டு புத்தூர், நால் ரோடு மற்றும் தென்னூர் வழியாக மீண்டும் தில்லை நகர் மக்கள் மன்றம் வந்தடைந்தது. இந்த சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட அவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை மண்டல மேலாளர் பாபு நரேந்திரன், வட்டார முதன்மை மேலாளர் ராஜேஷ் மற்றும் மேலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0