தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பணியாளர்களுக்கு மிதி வண்டி ஓட்டும் பயிற்சி…

12 August 2020, 10:29 pm
Quick Share

திருவாரூர்: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பணியாளர்களுக்கு மிதி வண்டி ஓட்டும் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்தே திருவாரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கொரானா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தலைவர் சைலேந்திரபாபு அவரது உத்தரவின்பேரில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின் பேரிலும் திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசியா அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் 12 தீயணைப்பு ஊர்திகள் 12 நிலைய அலுவலர்கள் 7 நிலைய அலுவலர் போக்குவரத்து மற்றும் 110 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

இதில் 15 தீயணைப்பு சிறப்பு கமாண்டோ வீரர்கள் பிரத்தியோக பயிற்சி பெற்ற 15 நீச்சல் வீரர்களுடன் பிரத்தியோக உப காரணங்கள கொண்டுவடகிழக்கு பருவமழை யில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும் தற்போது வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் சுறுசுறுப்புடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பணியாளர்களுக்கு மிதிவண்டி ஓட்டும் பயிற்சி தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்து தீயணைப்பு மீட்புப் பணி துறையின் அலுவலர் மற்றும் பணியாளர்கள் மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் சோடியம் ஹைட்ரோ குளோரைடு கிருமி நாசினி தெளித்து கிருமித் தொற்றினை குறைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் தொற்று காரணமாக பசியால் வாடும் ஆடு மாடு நாய் போன்ற விலங்குகளுக்கு தீயணைப்புத்துறையினர் உணவும் வழங்குகின்றனர் .திருவாரூரில் சிறப்பாக பயிற்சி பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து உதவி மாவட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு மீட்பு கருவிகளுடன் ஊட்டி நிலச்சரிவு மீட்புப் பணிக்காக இயக்குனர்கள் உத்தரவின்படி ஊட்டிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் யோகா. உடற்பயிற்சிகளும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசியா தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பணியாளர்களுக்கு மிதிவண்டி பயிற்சியை துவங்கி வைத்த மாவட்ட அலுவலர் அனுசியா அவரும் மிதிவண்டி பயிற்சியிலும் கலந்து கொண்டார்.

Views: - 11

0

0