கல்லங்குறிச்சி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தரிசனத்திற்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

18 September 2020, 10:09 pm
Quick Share

அரியலூர்: பிரசித்தி பெற்ற கல்லங்குறிச்சி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தரிசனத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில். ஏழைகளின் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கபடும் இக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் உலகையை அச்சுருத்தி கொண்டிருப்பதாலும் கல்லங்குறிச்சி கோவிலில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாது என்பதாலும், இதனால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளதால் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மட்டுமல்லாது புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் கோவிலுக்கு வர தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். முன்னதாக கோவில் நிர்வாகத்தால் தடுப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது குறிப்பிடதக்கது.

Views: - 11

0

0