மகள் காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தி: மனமுடைந்த பெற்றோர் தற்கொலை

Author: kavin kumar
7 October 2021, 5:57 pm
Quick Share

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே முக்கரம்பக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் திமுக பிரமுகர் தாமரைச்செல்வன் விவசாயியான இவரதுமகள் அர்ச்சனாபல் மருத்துவராக பணி செய்து வருகிறார். அர்ச்சனா காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்த பெற்றோர் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மனைவி சரளா வீட்டில் தூக்கிட்டுதற்கொலைசெய்து கொண்டதை பார்த்த கணவர் தாமரைச்செல்வன் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் அர்ச்சனா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவராக பணி செய்து வந்த நிலையில் காவலராக பணிபுரிந்து வந்த கணபதி என்பவரை அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து 2வது திருமணம் செய்த பெண்னும்விபத்தில் உயிரிழந்த நிலையில்,

மூன்றாவதாகஅர்ச்சனாவை காதல் திருமணம் செய்துகொண்டு கடந்த 27 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றதால் மன உளைச்சலில் இருந்த அவரது தாய் சரளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்த அவரது கணவருமான தாமரைச்செல்வன் (60) வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அவரும் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தகவலறிந்து சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 201

0

0