மகளிர் சுயஉதவிகுழு பெண்களுடன் தயாநிதி மாறன் கலந்துரையாடல்

26 February 2021, 8:54 pm
Quick Share

திருவண்ணாமலை: அம்மாபாளையம் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் மகளிர் சுயஉதவிகுழு பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்துரையாடல் செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் கலந்துரையாடினார். அப்போது தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி எனவும், அதன் பின் முதல்வராக அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு எவ்வித நலனும் செய்யப்படாமல் மத்திய அரசுக்கு கைகூலியாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசை எதிர்த்து பேசக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் எனவும், அவரை வெற்றிபெற வைத்தால் மட்டுமே தமிழகம் தலைநிமிரும் என கூறினார்.

இதனை தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தபோது, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என போராடியவர் தந்தை பெரியார் அதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா, கலைஞர் என பெண்கள் நலனுக்காக போராடி வந்தவர்கள் எனவும், அவர்களை போலவே மு.க.ஸ்டாலின பின்பற்றி வருகிறார் என தெரிவித்தார்.மேலும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் என்று பேசிய தயாநிதிமாறன், மாணவர்களாகிய நீங்கள் நீட் தேர்வின்றி மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வை எதிர்க்க தி.மு.க தலைமையிலான அரசை வெற்றிபெற செய்ய வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மக்கள் திமுக தலைவர் தான் தமிழகத்திற்கு முதல்வராக வரவேண்டும் என ஒருமித்த குரலோடு உள்ளதாகவும், தமிழக மக்களை காக்க கூடியவர் தமிழக மக்களின் ஒரே குரலாக ஒலிப்பது ஸ்டாலினை முதல்வராக அரியணையில் அமர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் மக்கள் மக்கள் மனதில் தளபதி ஸ்டாலின் உள்ளார். அவர் முதல்வராக வருவது உறுதி 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது போன்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்களுக்கு ஒரு சிறப்பான ஒரு பயனுள்ள அறிக்கையாக இருக்கும் என தெரிவித்தார். தமிழக மக்களை ஏமாற்றும் ஒரு அறிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுகிறார். தேர்தலை காரணம் காட்டி இது போன்ற ஏமாற்று அறிக்கைகள் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கும் தேர்தல் அறிக்கையை அதிமுகவினர் பின் தொடர்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை கண்டு அதிமுகவினர் அஞ்சுவதாக தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அறிக்கையாக இருக்கும் என தெரிவித்தார். 9.10.11 ம் வகுப்பை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது தேர்தலை முன்வைத்தே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததாக குற்றம் சாட்டினார்.

Views: - 17

0

0