சாலையில் வீசப்பட்ட இறந்த கன்று குட்டி… உரிமையாளருடன் பொதுமக்கள் வாக்குவாதம்…

1 August 2020, 8:52 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே இறந்த கன்று குட்டியை சாலையோரத்தில் வீசிய சென்ற நபருக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தாராபுரம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை இந்த குப்பைகளை கொட்டி வருகின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாப்பிடும் நாய்கள் இறைச்சிக் கழிவுகள் இல்லாத நேரத்தில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருவது தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் முன்புறம் இறந்துபோன கன்று குட்டியை மினி வேனில் சாலையோரத்தில் வீசி செல்ல முயன்றபோது மினிவேன் இன் சக்கரம் குளியில் சிக்கியது.

இதை அறிந்த அருகில் உள்ள பொதுமக்கள் மினி வேனை பார்க்கும்போது கன்று குட்டியை வீசியது தெரியவந்தது. அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாடுகளை ஏற்றி ஏற்றி வந்த மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களும் விவசாயிகளுக்கு கன்று குட்டியை சாலையில் ஓரத்தில் வீசி அவர்களை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் இறைச்சிக் கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு உணவு கிடைக்காத நேரத்தில் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது இறந்துபோன கன்று குட்டியை சாலையில் வீசிச் சென்றால் நாய்கள் இழந்த மண்ணை தின்று விட்டு மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் வேட்டையாடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருப்பதாக தெரிவித்தனர். இந்த தகவல் நஞ்சியம்பாளையம் ஊராட்சி செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் சாலையோரத்தில் இறந்த கன்று குட்டியை சாலையில் வீசி செல்ல முயன்ற நபர் 2000 அபராதம் விதித்துள்ளனர்.

Views: - 2

0

0