நாய்கள் கடித்து ஏழு மணி நேரம் உயிருக்கு போராடிய உயிரிழந்த மான்

Author: Udhayakumar Raman
27 June 2021, 2:57 pm
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே நாய்கள் கடித்து ஏழு மணி நேரம் உயிருக்கு போராடிய மானை மீட்க தகவல் அளிக்கப்பட்டும் வனத்துறையினர் வராததால் பரிதாபமாக மான் உயிரிழந்தது அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே கேசவராயன்பேட்டையில் நேற்று இரவு ராமாபுரம் காட்டுப்பகுதியில் இருந்து உணவுக்காக வழி தவறி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததில் உயிருக்குப் போராடி கத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்து பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மானை நாய்கள் கடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை கண்டு பிடித்தனர் அவருக்கு முதல் உதவி செய்து கிராமத்தில் வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் வனத்துறையினர் வராத காரணமாக நேற்று இரவு முதல் ஏழு மணி நேரம் உயிருக்கு போராடிய மான் துடிதுடித்து உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நேற்று இரவு இரண்டு மணியிலிருந்து வனத்துறையினருக்கு கால்நடை பராமரிப்புத்துறை நிற்கும் பலமுறை புகார் அளித்தோம் ஆனால் வெகு நேரமாகியும் மானை மீட்டு சிகிச்சை அளிக்க வராத காரணமாக அம்மா எங்கள் கண்முன்னே துடிதுடித்து இறந்தது எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலமுறை தகவல் அளித்தும் மானை மீட்க வராத வனத்துறையினர் மீதும் கால்நடை பராமரிப்புத்துறை மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 110

0

0