சேலம் வாலிபர் நாமக்கல்லில் பணியாற்றி வந்த ஸ்பின்னிங் மில்லில் மர்ம மரணம்…

9 November 2020, 10:09 pm
Quick Share

சேலம்: ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்த வாலிபர் உயிரிழப்பில் மர்ம மரணம் ஈரப்பதாகவும், உடலில் காயங்கள் உள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பெற்றோர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலம் எடப்பாடி தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி, பழனியம்மாள் தம்பதியரின் மகன் சுரேஷ்(22). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று சுரேஷ் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக கூறி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுரேஷின் பெற்றோர்கள் நேரில் சென்று பார்த்தபோது உடலில் வயிறு மற்றும் கால் பகுதிகளில் அடித்த காயம் இருந்ததாக கூறியுள்ளனர். இதற்கு முன்பாக சுரேஷ் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு உடன் பணியாற்றும் அண்ணாமலை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அடுத்த நாளே சுரேஷ் இறந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சுரேஷின் உடலை சேலத்திற்கு மாற்றி சேலம் அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதியுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் காவல்துறையினர் தகவல் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனை அனுப்பி உள்ளனர் எனவே என் மகன் மரணத்தில் மர்மம் உள்ளதால் முறையாக விசாரணை நடத்த வேண்டும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாநகர காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு நீதி கேட்டு சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அண்ணாதிறை மற்றும் நிர்வாகிகள் அரசு மருத்துவமனை சென்று காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

Views: - 17

0

0