பல பரிசுகளை வென்ற காளை மாடு உயிரிழப்பு: கதறியழுது காளையை அடக்கம் செய்த பொதுமக்கள்

20 January 2021, 10:35 pm
Quick Share

வேலூர்: வேலூரில் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்ற காளை மாடு உயிரிழந்ததை அடுத்து உறவினர்களும் பொதுமக்களும் கதறியழுது மனிதர்கள் அடக்கம் செய்வது போல நல்லடக்கம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காவலூர் பகுதியில் அண்ணாமலை என்பவர் சொந்தமான “செண்பகதோப்பு டான்” என்கிற காங்கேயம் வகையை சேர்ந்த காளை ஒன்றை வளர்த்து வந்தார். கடந்து ஆண்டு மட்டும் 6 கிராமங்களில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ஆம் தேதி அணைகட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவிற்கு தனது காளையை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பந்தயத்திற்கு முன்பாக அணைக்கட்டு சாலையில் சென்று கொண்டிருந்த காளையை மினி லாரி ஒன்று மோதியது. அதில் காளை பலத்த காயம் அடைந்தது.

இதனை தொடர்ந்து வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் காளைக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த நிலையில் காளை இன்று உயிர் இழந்தது.இதனால் வேதனை அடைந்த அப்பகுதி பொதுமக்களும் , உரிமையாளரும் காளைக்கு மாலை அணிவித்து கதறி அழுதனர். பின்னர் காளையை மனிதர்களை அடக்கம் செய்வது போல நல்லடக்கம் செய்தனர்.

இறந்த மனிதர்களையே அனாதை பிணமாக விட்டுவிட்டுச் செல்லும் இக்காலத்தில் காளை மாட்டிற்கு நல்லடக்கம் செய்தது அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Views: - 0

0

0