கன்னியாகுமரியில் அறக்கட்டளை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : மன உளைச்சலால் தீக்குளிக்க முயற்சி!!

20 November 2020, 2:31 pm
Quick Share

கன்னியாகுமரி : குமரி அறக்கட்டளை நிர்வாகிக்கு தொடர் மிரட்டல் விடுத்த போலீசாரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் பேரோடு பகுதியில் உள்ள யோகிராம்சுரத்குமார் அறக்கட்டளை நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அதே அறக்கட்டளை நிர்வாகியான மற்றொரு பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இவருக்கு எதிராக எதிர் தரப்பு பாலகிருஷ்ணன் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு இவருக்கு தொடர்ந்து மிரட்டலும் விடுத்துள்ளனர் .

இதனால், மனவேதனை அடைந்த இவர் இன்று திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0