கடன் தொல்லையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

6 August 2020, 10:55 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் அருகே கடன் தொல்லையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் கொரோனா ஊரடஙகால் வேலையிழந்த அவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் தனி நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திருப்பி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி மனமுடைந்து

கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனது வீட்டினில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனலட்சுமி தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் தனலட்சுமி மீட்ட உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0