மான், மலபார் ஸ்குரில் வேட்டை : சுற்றுலா பயணிகள் உட்பட 5 பேர் கைது
9 September 2020, 5:54 pmநீலகிரி: குன்னூரில் சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்துச் சென்று குறைக்கும் மான் மற்றும் மலபார்ஸ் ஸ்குரில் ஆகியற்றை வேட்டையாடிய காட்டேஜ் உரிமையாளர் உட்பட 4 சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கேத்தி பகுதியில் தனியார் காட்டேஜ் நடத்தி வருபவர் மணிகண்டன், 43.
இவர் நேற்று இரவு, கேத்தி கோலானி மட்டம், முட்டிநாடுவனப்பகுதியில், தூத்துக்குடி மதுரை பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்று அங்கு, மலபார் ஸ்குரில் மற்றும் குரைக்கும் மானை வேட்டையாடி காட்டேஜ்க்கு கொண்டு வந்து சமைத்து உண்டுள்ளனர். வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வனத்துறையினர் அங்கு சென்று, சோதனை செய்தனர்.
அப்போது அங்கு வனவிலங்குகளை கொன்று சமைப்பதற்கு தயாராகி கொண்டிருந்தது. அப்போது அவர்களை பிடித்து, குந்தா கைகாட்டி வனச்சரக அலுவலகத்தில் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பிறகு,தூத்துக்குடியை சேர்ந்த ஜான் ஆம்ஸ்ட்ராங் ஜெபக்குமார், ராமையா, மதுரை சுலைமான் அவர்களிடமிருந்து சொகுசு கார், ஏர்கன் மற்றும் சமைப்பதற்காக தயராக வைத்திருந்த இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன். பின்னர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0