பாஜக தலைவர் முருகன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் கௌதமன் மீது வழக்குபதிவு செய்ய கோரி பாஜக சார்பில் புகார்

17 November 2020, 8:24 pm
Quick Share

மதுரை: பாஜக தலைவர் முருகன் குறித்து அவதூறாக பேசிவரும் இயக்குனர் கௌதமன் மீது வழக்குபதிவு செய்ய கோரி மாவட்ட எஸ்பியிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

திரைப்பட இயக்குனர் கௌதமன் மற்றும் கிறிஸ்துவ பாதிரியார் ஆகியோர் பாஜகவின் தமிழ் மாநில தலைவர் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதாகவும், இந்த செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என கூறி பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து மதுரை பாலமேடு அருகேயுள்ள பெருமாள்மலையில் கிரசர் குவாரி அமைப்பதற்கான பணிகளை அரசு தொடங்கினால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அனுமதிக்கூடாது என கூறியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கிரசர் குவாரிகளால் ஏற்கனவே விவசாயம் அழிந்துவருவதால் புதிய குவாரிகளுக்கு அனுமதி அளிக்ககூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எனவும் இயக்குனர் கௌதமன் பாஜக தலைவர் குறித்து பேசிவருகிறார் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.