அரசு மருத்துவமனையில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டிகள்: அழுகும் நிலையில் சடலங்கள்

Author: Udhayakumar Raman
27 November 2021, 6:00 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிணவரையில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் பழுதடைந்து உள்ளதால் சடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தப் பகுதியில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம்.வாகன விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனைக்கும், குரோம்பேட்டை மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதனால் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அரசு மருத்துமனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டிகளில் வைத்துவிடுவார்கள்.

உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் அந்தந்த சடலங்கள் அளிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் பேறறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக பிரேத பரிசோதனை கூடத்தில் சடலங்கள் வைக்கப்படும் குளிரூட்டும் பெட்டி (பிரீசர்) வேலை செய்யாததால் இறந்துபோன வட இந்திய வாலிபர் ஒருவரின் சடலம் அழுகி போனது. ஆறு சடலங்கள் வைக்கும் அந்த அறையில் குளிரூட்டும் பெட்டிகள் பழுதடைந்துள்ளதால் இறந்து போனவர்களின் சடலங்களை பேணிக்காப்பது இயலாத விஷயமாகி விட்டது.அரசு மருத்துவமனையின் நிர்வாக கோளாறு காரணமாகதான் இதுபோன்ற செயலற்ற தன்மை உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இங்கு சடலங்களை வைக்க அனைத்து வசதிகளும் இருந்தும் குளிரூட்டும் பெட்டிகளை சரி செய்யாத காரணத்தினால் இங்குள்ள சடலங்களை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்புகின்ற அவல நிலை உள்ளது.

Views: - 89

0

0