பறவைகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

22 November 2020, 8:42 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை டெல்டா மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை தாளடி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வயல்களில் பறவைகள் அதிக வண்ணம் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பல கிராமங்களில் இரவு நேரங்களில் மருந்து வைத்து காலை நேரத்தில் பறவைகளை சமூகவிரோதிகள் வேட்டையாடி செல்கின்றனர். செங்கிப்பட்டி அருகே இருக்கக்கூடிய ஏரிகளில் சமூக விரோதிகள் மருந்து வைத்து பறவைகளைப் பிடிப்பதற்காக வைத்துள்ளனர். இதில் அதிகமான பறவைகள் வயல்களில் இறந்து விட்டது.

மேலும் மயக்கநிலையில் இருந்த பறவைகளை சமூக விரோதிகள் எடுத்து சென்று விட்டனர் என விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இதையடுத்து உடனடியாக சமூக விரோதிகளை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து இறந்து கிடந்த பறவைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பறவைகளுக்கு விஷம் வைத்த சமூக விரோதிகள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Views: - 14

0

0