விவசாய நிலங்களை பாதிக்கும் பார்த்தீனிய செடியை அழிக்க கோரிக்கை

By: Udayaraman
6 October 2020, 6:33 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், மனிதர்கள் , கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களை பாதிக்கும் பார்த்தீனிய செடியை அழிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. போதிய மழை இல்லாததால் வானம் பார்த்த பூமியில் மழை பெய்தால் மட்டுமே மானவரிய பயிர்கள் சாகுபடி செய்ய முடியும் இல்லையெனில் விவசாய நிலங்கள் காலியாக இருக்கும் அப்படி காலியாக உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனியா என்கிற கொடிய விச செடி படர்ந்து நிலம் முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது. இதனை விவசாயிகள் அகற்றிவிட்டு பயிர் செய்தால் அதனுடன் இந்த செடி முலைத்து விளைச்சலை பாதித்து விடுகிறது.

அதுமட்டும் அல்லாமல், வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு காற்று மாசுபடுதல் மூலம் சுவாசம், நுரையீரல் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் களைச்செடிகளாக பயிர்களுக்குப் பாயும் நீரையும் பங்குபோடுகின்றன. ஆடு, மாடு மற்ற கால்நடைகளுக்கு இரையாக போட்டாலோ, மேச்சலில் அவைகள் தவறுதலாக உண்டாலோ கால்நடைகள் பிற செடிகளுடன் கலந்து உட்கொண்டு விட்டால், குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை, எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அவற்றிற்கு நோய்கள் வந்து இறைச்சி மற்றும் பால் மூலம் மனிதர்களைத் தாக்குவதோடு, சாணக்கழிவுகளில் இதன் மகரந்தங்கள் மீண்டும் இவை வளர்ந்து பரவிப் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆகையால், இமனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துவதுடன், பயிர்களின் வளர்ச்சியை பாதித்து, 30 முதல் 40 சதவீத விளைச்சலை குறைத்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தற்போது தருமபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய செடிகளை அழிக்க வேளாண்மை துறையினர் விவசாயிகளுக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 51

0

0