பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: போலீசாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு

Author: kavin kumar
29 October 2021, 6:22 pm
Quick Share

கோவை: கோவையில் பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரபிதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இழிவு படுத்தும் விதமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நடத்திய போராட்டத்தை கண்டித்து கோவை குணியமுத்தூர் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் கலந்து கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடியை கிழித்து, எரிக்க முயன்றதால் அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையோ தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் கோவை பாலக்காடு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஆயித்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 160

0

0