எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

2 February 2021, 4:32 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், பாரத் பெட்ரோலியம், அரசு வங்கிகள், ஏர் இந்தியா மற்றும் இந்திய ரயில்வே துறை ஆகியவற்றை தனியார் மயமாக்குவதை கண்டித்து அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இரண்டு நாள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து‌ இன்று திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உள்ள டிஆர்எம் அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம் யூ மற்றும் ஏஐஆர்எப் இணைந்து 2 நாள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்ககும் மத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 16

0

0