பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 July 2021, 1:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் .

திருச்சி ஏஜடியூசி மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகளின் சட்டம் 2014 உடனடியாக அமுல்படுத்த வேண்டும், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை தடை செய்ய கூடாது, போக்குவரத்தை காரணம் காட்டி காந்தி மார்க்கெட் தள்ளுவண்டி வியாபாரிகளை அப்புறப்படுத்த கூடாது,

தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை முறைப்படி கணக்கெடுத்து அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கிடு காலக்கெடு முடிந்த வியாபாரிகளின் அடையாள அட்டையை உடனடியாக புதுப்பித்துக் கொடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனை நிபந்தனையின்றி உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சிவா, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் திராவிடமணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 68

0

0