கடன் தொகையை வசூல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
25 June 2021, 7:32 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூல் செய்வதை கண்டித்து புதுச்சேரியில் தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு பொதுமக்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழு, மற்றும் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாங்கள் அளித்த கடனுக்கான மாத்தவணையை கட்ட வலியுறுத்தி பொதுமக்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் தங்களுடைய மாத தவனை தொகையை வசூலிப்பதை தற்பொதுள்ள சூழலில் நிறுத்த வேண்டும் என்றும்,

மாத தவணை தொகையை கட்டுவதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும், கட்டத்தவறிய தொகைக்கு வட்டி நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Views: - 382

0

0