ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

31 August 2020, 3:34 pm
Quick Share

ஈரோடு: நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். மாவட்ட நலவாரிய கண்காணிப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும், நலவாரிய நேரடி பதிவு புதுப்பித்தலை நலவாரியம் மூலமாக செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன. மேலும் வாரியத்தில் பதிவு செய்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரணநிதி வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளுக்கும் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் ஆரம்பத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Views: - 5

0

0