பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

25 June 2021, 2:32 pm
Quick Share

திருச்சி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்தை பாடை கட்டி நூதன முறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் தற்பொழுது பெட்ரோல் டீசல் விலை வேகமாக ஏறி கொண்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை தற்போது 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பாலக்கரை பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஷாஜகான் தலைமையில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டு இருசக்கர வாகனத்தை பாடைகட்டி நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 125

0

0