பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
25 August 2021, 2:56 pm
Quick Share

திருவள்ளூர்: காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர்துறைமுகத்தில்20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 120 பெண்தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய வாரிசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஆண்டு விடுப்பு 18 நாட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும், காமராஜர் துறைமுகத்தினை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் துறைமுக வாயில் முன்பாக ஒப்பந்தத்தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்ட்சிஐடியுதொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 134

0

0