சுகாதார சீர்கேட்டை கண்டித்து கொசு வர்த்திகள் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்

23 September 2020, 7:08 pm
Quick Share

திருச்சி: திருச்சி எடமைப்பட்டி புதூர்,கே.கே நகர் போன்ற பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து கொசு வர்த்திகள் ஏந்தியபடி கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி மாநகர் பகுதிகளான கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், கே.கே நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளாலும், சாக்கடைகளை தூர்வாராததாலும், முறையாக குப்பைகளை அள்ளாததாலும் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் மக்கள் கொசுக்கடியால் மிக கடுமையாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அப்பகுதியின் சுகாதாரத்தை உறுதிபடுத்த, உடனடியாக சுத்தம் செய்து கொசு மருந்தை அடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பாக கொசுவர்த்தியுடன் ஆர்பாட்டம் நடத்தினர்.

மாநகராட்சியின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறுகின்றனர். ஆனால் அது போன்று எந்த பணியும் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், உடனடியாக அப்பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனுவையும் அளித்தனர்.

Views: - 6

0

0