ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்…

26 November 2020, 3:23 pm
Quick Share

ஈரோடு: தொழிலாளர்கள் விரோத போக்கு மற்றும் வேளாண் சட்டத்தை எதிர்த்து ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாய அமைப்புகள் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும், வருமான வரி கட்டுமளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7500/- ரூபாய் வீதம் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்,

தேவைப்படும் அனைவருக்கும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி/கோதுமை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நகரப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அனைவருவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்… என்பன உள்ளிட்ட 7 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.

Views: - 0

0

0