குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

14 January 2021, 2:24 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய சாலியத் தெருவில் 15 நாட்களுக்கு மேலாக சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் அவ்வழியே செல்லும் மக்கள் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனக்கூறினர் . இதனை அப்புறப்படுத்த கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் அனைத்து வீடுகளிலும் நகராட்சி நிர்வாகம் குப்பை வரி வாங்கி சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நகராட்சி அலுவலகம் முன்பு அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்

Views: - 4

0

0