திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

22 September 2020, 6:30 pm
Quick Share

ஈரோடு: சென்னையில் பாஜக மகளிரணியினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோட்டில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள சுவற்றில் திமுகவின் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுகவினரின் விளம்பரப்படுத்தை அழித்து பாரதிய ஜனதா கட்சியின் விளம்பரம் எழுத முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியினருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினரை தாக்கிய திமுகவினரை கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மகளிரணியினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மகளிர் உள்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.