இந்துமத வழிபாடு ஸ்தலங்கள் திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
7 October 2021, 4:56 pm
Quick Share

திருச்சி: தமிழகத்தில் இந்துமத வழிபாடு ஸ்தலங்கள் திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி திருச்சியில் பாஜக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனோ தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தமிழக அரசு திங்கள் முதல் வியாழன் வரை மத வழிபாட்டு தளங்களை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கட்டாயமாக மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அதற்கு அனுமதி இல்லை என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உடனடியாக மத வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் முன்பு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்துமத வழிப்பாட்டுத் தலங்களை திமுக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஆர்ப்பாட்ட உரையை மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் வழங்கினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அய்யப்பன், சந்திரசேகர் சிவசாமி ராஜேந்திரன் உட்பட 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 117

0

0