பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
13 September 2021, 4:52 pm
Quick Share

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

OHT ஆப்ரேட்டர்களுக்கு ரு 1.400 உயர்வு அரசாணையை திருத்தம் செய்து அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும், 7வது ஊதியக் குழு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை (அரியர்) 45 மாதமாகிவிட்டது உடனே வழங்கப்பட வேண்டும், ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகையில் ரூ.15.000 ஆயிரம் வழங்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு ) சங்க சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 116

0

0