கவர்னகிரி மாவீரர் சுந்தரலிங்கனார் சிலையை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

21 September 2020, 8:43 pm
Quick Share

தூத்துக்குடி: கவர்னகிரி மாவீரர் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலையை மாற்றக் கோரி தமிழர் விடுதலை கொற்றம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவர்னகிரி மாவீரர் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலையை மாற்றக் கோரி தமிழர் விடுதலை கொற்றம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இயக்க தலைவர் வியனரசு தலைமையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையிலும், கவர்னகிரி மாவீரர் சுந்தரலிங்னார் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சுந்தரலிங்கனாரின் மார்பளவு சிலைகள், அவருடைய வரலாற்று வீரதீர செயல்களுக்கு பொருத்தமற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவந்திரகுல வேளாளர் சமுதாய மக்களும், அரசியல் கட்சியினரும், அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் தற்போது, மாவீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபம் மறுசீரமைப்பு வேலைகளின் போது மக்களின் கருத்துரையை ஏற்று, நெற்கட்டும்செவல் ஒண்டிவீரனின் சிலையைப போன்று மாவீரன் சுந்தரலிங்கனார் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போல் வீரதீர தோற்றத்துடன் சிலை அமைக்க வேண்டும் என்றார்.

Views: - 4

0

0