காற்று மாசு அடர்த்தி காரணமாக டெங்கு பரவாது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

15 November 2020, 5:19 pm
Quick Share

திருவள்ளூர்: தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெங்கு 15 மடங்கு குறைவாகவே உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவள்ளூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோருடன் கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் உள்ளிட்டவைகளை கொட்டும் மழையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனை கல்லூரி கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தமிழகத்தில் கொரானா வைரஸ் கட்டுக்குள் உள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெங்கு 15 மடங்கு குறைவாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், பழவேற்காடு பொன்னேரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் என மிகவும் 600 மருத்துவர்களை நியமிக்கப்பட உள்ளதாகவும், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Views: - 17

0

0