கலந்தாய்வுக்கான கால தாமத்திற்கு துணைநிலை ஆளுநர் காரணம்: நாராயணசாமி குற்றச்சாட்டு

19 November 2020, 5:43 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கான காலதாமத்திற்கு துணைநிலை ஆளுநரே காரணம் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் அரசு செலவில் இலவசமாக கொரோனா மருந்து வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்ட பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் துணைநிலை ஆளுநர் அந்த கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி காலம் தாழ்த்தி வருகிறார் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி,

மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ள தேதிக்குள் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது மேலும் கலந்தாய்வு நடத்துவதற்கு ஏற்படும் காலதாமத்த்திற்கு துணைநிலை ஆளுநரே காரணம் என்றும் குற்றம்சாட்டினார். உள் ஒதுக்கீடு, மத்திய இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தலையிட்டு இரட்டை ஆட்சி நடத்தி வருவதாகவும் இதனை இன்றுடன் துணை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Views: - 15

0

0