சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

5 July 2021, 1:29 pm
Quick Share

விருதுநகர்: பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில்,

இதேபோல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் காலை 7 மணி முதல் 1 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி எனவும், பத்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 108

0

0