பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை: மழை பெய்தால் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

29 September 2020, 2:55 pm
Quick Share

விருதுநகர்: பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு வந்த பக்தர்களை மழை பெய்தால் கோவில் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம் மட்டும் பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பிரதோஷம் என்பதால் சதுரகிரி கோவிலுக்கு அதிகாலை முதலே அதிகமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் உடல் பரிசோதனை, சானிடைசர் கொண்டு கை கழுவிய பின்னரே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.