சதுரகிரி கோவிலுக்கு மலை ஏற பக்தர்களுக்கு தடை…

27 November 2020, 1:30 pm
Quick Share

விருதுநகர்: மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி செல்வதற்கு ஏற்கனவே பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை வனத்துறை ரத்து செய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 உயரத்தில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 10 பேர் உயிரிழந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

குறிப்பாக அமாவாசை, பௌர்ணமிக்கு 4 நாட்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான குறிப்பாக சதுரகிரி செல்லும் பிரதான வாயிலான பகுதிகளில் மழை பெய்து கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே மலை ஏற வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்த வனத்துறை தொடர்ந்து பக்தர்களை மலை ஏற அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதிய புயல் யூகித்த மழையை விட அதிக அளவு மழை பெய்யும் இதனால் சிற்றோடைகள் வெள்ளப்பெருக்கால் மூழ்கும் என்ற அடிப்படையில் சதுரகிரி மலை ஏற தடையானது தொடர்ந்து 4 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0