100 நாள் வேலை செய்யும் 45 வயது மேற்பட்டோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி

7 May 2021, 4:34 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே 100 நாள் வேலை செய்யும் 45 வயது மேற்பட்டோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடை பெற்றது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள சி.அய்யம்பட்டியில் சுமார் 1,500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் முதற்கட்டமாக சி.அய்யம்பட்டியில் பகுதியில் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட திட்டமிட்டு இன்று இராமியணஅள்ளி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 100 நாள் வேலை செய்யும் 45 வயதிற்கு மேற்பட்ட 80க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Views: - 65

0

0