ஒன்றன் பின் ஒன்று லாரி மோதி விபத்து:போக்குவரத்து பாதிப்பு

Author: kavin kumar
19 August 2021, 4:56 pm
Quick Share

தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் ஒன்றன் பின் ஒன்று லாரி மோதி விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாமக்கல்லிற்கு, துறையூர் அடுத்த வெல்லியனூர் முசிறி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மகேஷ் மற்றம் சிவசங்கர் ஆகியோர் சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பிரேக் பிடிக்காமல் எதிர்பாராத விதமாக லாரி ஆஞ்சநேயர் கோயில் எதிரே உள்ள பாலத்தில் மோதி நின்றது.

அதனை பின் தொடர்ந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ஸ்டீல் காயல் லோடு ஏற்றிவந்த லாரி மோதியதில் முன்னாள் சர்க்கரை பாரம் ஏற்றி வந்த லாரி பலத்த சேதம் அடைந்தது இதில் ஓட்டுனர்கள் இருவரும் எந்த காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Views: - 339

0

0