ஓடையில் மணல் அள்ளிய நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி பறிமுதல்

7 August 2020, 7:24 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள சஞ்சீவிராயன் கோயில் ஓடையில் மணல் அள்ளிய நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சஞ்சீவிராயன் கோயில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக பெண்ணாகரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது 4 டிராக்டர்களில் ஜேசிபி எந்திரம் உதவியுடன் மணல் அள்ளப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 4 டிராக்டர்கள் மற்றும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட பவளந்தூரை சார்ந்த ரமேஷ் வயது 39 ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த கார்த்திக் வயது 29 ஆகிய இருவரையும் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு தொடர்புடைய பெரியசாமி வயது 48 முத்துவேல் வயது 25 செல்வம் வயது 25 ஆகிய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .ஒரே நேரத்தில் 4 டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 16

0

0